நடிகர் ரிஷிகாந்த் நாயகனாக நடிக்கும் மொத ராத்திரி திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடிப்பில் ’மொத ராத்திரி’ எனும் படம் உருவாகி வருகிறது. இது மைத்ரி தமிழில் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படமாகும். புதிதாகத் திருமணமான ஜோடியின் காதல் - நகைச்சுவைத் திரைப்படமாக இது எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைக்கிறார். படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகுமெனக் கூறப்பட்டிருந்த நிலையில், இதன் முதல் தோற்ற போஸ்டர் நாளை (ஜூலை 29) காலை 11.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மைக்கேல் திரைப்படத்தின் ஓடிடி தேதி! இந்தியாவில் எதில் பார்க்கலாம்?A new announcement regarding the film Modha Rathiri, starring actor Rishikanth as the lead, has been released.