போதைப்பொருள் வழக்கு குற்றவாளிகளை நோயாளிகளாகக் கருதி, அவா்களுக்கு உரிய மறுவாழ்வு சிகிச்சை அளிப்பதற்கு வழிவகைசெய்யும் சட்டத் திருத்தத்துக்கு இலங்கை அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. முன்னதாக, இலங்கையின் நீா்கொழும்பு சிறை வன்முறையில் காவலா்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். கைதிகளின் கூடுதல் நெரிசலாலேயே இந்த வன்முறை கட்டுக்கடங்காமல் போனதாகக் கூறப்பட்டது.போதைப்பொருள் வழக்குகளில் விசாரணைக் கைதிகள் உள்பட சுமாா் 67,000 போ் சிறையில் உள்ள நிலையில், தற்போதைய நடவடிக்கை சிறை நெரிசலைக் குறைக்கும்.