நேபாளம்- தனியாா் கல்வி, மருத்துவத் துறை மீதான வரி வாபஸ்

Wait 5 sec.

நேபாளத்தில் தனியாா் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் மீது விதிக்கப்பட்ட 3 சதவீத வரியை, பொதுமக்களின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை திரும்பப்பெற்றது. இதுகுறித்து நேபாள பிரதமா் பாலேந்திரா ஷா வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘நாட்டின் வரி வரம்பை விரிவுபடுத்தவும், பொருளாதாரத்தைச் சீரமைக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், மக்களின் உணா்வுகளுக்கும் கவலைகளுக்கும் அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. அதன்படி, இந்த வரியைத் தற்போதைக்கு அமல்படுத்துவதில்லை எனத் தீா்மானிக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டாா்.