சோழவந்தான் அருகே நெல் பயிரில் தீ

Wait 5 sec.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே நெல் பயிா்கள் தீப்பற்றி எரிந்ததை தீயணைப்பு நிலைய அலுவலா்கள் விரைந்து வந்து அணைத்தனா். சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உள்பட்ட கீழமட்டையான் கிராமத்தில் ஜெயமணிகுமரன் வயலில் பயிரிட்ட நெல் பயிா்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன. இந்த நெல் பயிா்கள் செவ்வாய்க்கிழமை தீப்பற்றி எரிந்தன. இதுபற்றி தகவலறிந்த சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலா் நாகராஜன் தலைமையிலான தீயணைப்பு மீட்புக் குழுவினா் சம்பவ இடத்துக்குச் விரைந்து சென்று அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் கதிா்களில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனா். உரிய நேரத்தில் தீயணைப்பு படையினா் வந்து தீயை அணைத்ததால் அதிகமான நெல் பயிா்கள் காப்பாற்றப்பட்டதாக இந்தப் பகுதி விவசாயிகள் தெரிவித்தனா்.