ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு - 2 வெளியீட்டுத் தேதி!

Wait 5 sec.

ஹிப்ஹாப் ஆதி நடித்த மீசைய முறுக்கு - 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2017 ஆம் ஆண்டு ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, இசையமைத்து நாயகனாக நடித்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் “மீசைய முறுக்கு”. அப்படம் மூலம் கதாநாயகனாகவும் அடுத்தடுத்த படங்களில் ஆதி நடித்தார்.தற்போது, நடிகை குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதியின் “மீசைய முறுக்கு 2” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கேத்திகா ஷர்மா, யூடியூபர் ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில், இடம்பெற்ற ஆரா 10/10 ஆகிய பாடல்கள் பெரிய ஹிட் அடித்துள்ளன.September 25 #Meesayamurukku2 is coming to theatres worldwide #meesyamurukku2 #september25 #concertintheatres pic.twitter.com/AGYjuQCknJ— Hiphop Tamizha (@hiphoptamizha) July 23, 2026 இந்த நிலையில், மீசைய முறுக்கு திரைப்படம் வருகிற செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அப்பா - மகன் கதாபாத்திரங்களில் ஆதி நடித்துள்ளதாகத் தெரிகிறது. பிரியமுடன் விஜய்! ஜன நாயகன் சிறப்பு காணொளியால் கண்கலங்கிய ரசிகர்கள்!The release date for the movie Meesaya Murukku 2, starring Hiphop Adhi, has been announced.