ஓடிடியில் வெளியான டொவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி!

Wait 5 sec.

டொவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியின் வெளியான திரைப்படம் பள்ளிச்சட்டம்பி. நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்திருந்தார்.நடிகர் பிருத்விராஜ் சிறப்புத் தோற்றத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில், விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், பிரசாந்த் அலெக்ஸாண்டர், வினோத் கெடமங்களம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.1980-களில் கிறிஸ்துவ ஆலயம் ஒன்றை காப்பதற்காக சில கிறிஸ்துவர்களால் ஊருக்குள் அழைத்து வரப்படும் சண்டியரான நாயகனின் கதையாக இந்தத் திரைப்படம் உருவாகியிருந்தது. திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற பள்ளிச்சட்டம்பி திரைப்படம், சோனி லைவ் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.Tovino Thomas's film Pallichattambi has been released on an OTT platform.ஓடிடியில் வெளியானது நஸ்லனின் மாலிவுட் டைம்ஸ்!