ஆஷஸ் 2027 தொடர்: அட்டவணை வெளியீடு!

Wait 5 sec.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் 2027 தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை இங்கிலாந்து நடத்துகிறது.கடைசியாக நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. அந்த வெற்றியின் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் ஆஸி. முன்னேறியது. டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சுவாரசியம் மிகுந்த இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு தனியான் ரசிகர்கள் கிரிக்கெட் உலகில் இருக்கிறார்கள். இந்தத் தொடர் அடுத்ததாக 2027ல் நடக்கிறது. இதனை இங்கிலாந்து நடத்துகிறது. முதல் போட்டி டிரெண்ட் பிரிட்ஜ் திடலில் நடக்கிறது. அந்தப் போட்டி ஜூன் 18 முதல் 22 வரை நடைபெற இருக்கிறது. முதல்போட்டி: டிரெண்ட் பிரிட்ஜ் - ஜூன் 18 முதல் 22இரண்டாவது போட்டி: லார்ட்ஸ் - ஜூன் 30 முதல் ஜூலை 4 மூன்றாவது டெஸ்ட்: எட்ஜ்பாஸ்டன் - ஜூலை 8 முதல் ஜூலை 12 நான்காவது டெஸ்ட்: சௌதாம்டான் - ஜூலை 21முதல் ஜூலை 25 ஐந்தாவது டெஸ்ட்: தி ஓவல் - ஜூலை 29 முதல் ஆக.2மகளிருக்கான ஆஷஸ் தொடரும் ஆடவருக்கான போட்டிகள் நடக்கும்போதே நடக்கவிருக்கிறது. இந்தப் போட்டி லீட்ஸ் திடலில் ஜூன் 24-27வரை நடைபெற இருக்கிறது. இதில் ஒரேயொரு டெஸ்ட் போட்டி, 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளாக நடப்பதும் கவனிக்கத்தக்கது. There's a huge change to the men's #Ashes schedule as the dates and venues are revealed: https://t.co/j2VW3997U6 pic.twitter.com/nWFhiw5cje— cricket.com.au (@cricketcomau) July 23, 2026உங்கள் நல்வாழ்வே ஒளிமயமான இந்தியாவின் அடித்தளம்: யுவராஜ் சிங்Trent Bridge to kick off the 2027 men''s Ashes as England hosts Australia