ஜன நாயகன் வெளியீடு! ஹெட்போன் வெறும் ரூ. 9, செல்போன் ரூ. 7,999!

Wait 5 sec.

ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ஹெட்போன் ரூ. 9க்கும், நெக்பேண்ட் ரூ. 99க்கும், செல்போன் ரூ. 7,999க்கும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டது.பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு, நீண்ட வரிசையில் நின்று, ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.தஞ்சாவூர் ஆத்துப்பாலம் பகுதியில் தனியார் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் விற்பனைக் கடை செயல்பட்டு வருகிறது. இதனிடையே, தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, செல்போன் ரூ. 7,999, ஒயர் ஹெட்போன் ரூ. 9, நெக்பேண்ட் ரூ. 99, ஸ்மார்ட் வாட்ச் ரூ. 249 என தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில், இன்று காலையிலேயே, ஏராளமான மக்கள் கடை முன்பு திரண்டு நின்றனர். கடை திறந்தவுடன் கடை உள்ளே நுழைவதற்கு முண்டியடித்துக் கொண்டு, பொருள்கள் வாங்க சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. தொடர்ந்து, பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று, செல்போன், ஸ்மார்ட் வாட்ச், ஒயர் ஹெட்போன் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வாங்கி செல்கின்றனர்.To mark the release of the movie Jana Nayagan, headphones were sold at a discounted price of rs. 9, neckbands at rs. 99, and mobile phones at rs. 7,999.ஜன நாயகன் படம் பார்த்து கண்ணீர்விட்ட அமைச்சர் பர்வேஸ்!