தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பே முதன்மை இலக்கு: எஸ்.பி. இரா. சிவ பிரசாத்

Wait 5 sec.

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பே முதன்மை இலக்கு என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. சிவ பிரசாத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தூத்துக்குடியின் 37ஆவது காவல் கண்காணிப்பாளராக இரா. சிவ பிரசாத் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு பராமரிப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.இவா் விருதுநகா் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா், மதுரை மாநகர சட்டம், ஒழுங்கு துணைக் காவல் ஆணையா், சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் அண்ணா நகா் துணைக் காவல் ஆணையா், மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளா் போன்ற பொறுப்புகளில் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.