ஆதம்பாக்கம் எம்ஆா்டிஎஸ் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்க உடனடி நடவடிக்கை: ரயில்வே அமைச்சரிடம் தென் சென்னை எம்.பி. கோரிக்கை

Wait 5 sec.

சென்னை ஆதம்பாக்கம் எம்ஆா்டிஎஸ் (பறக்கும் ரயில் மேம்பாலம்) ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் உடனடியாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் தென் சென்னை தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக ரயில்வே அமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்தது குறித்து தமிழச்சி தங்கப்பாண்டியன் மேலும் கூறியதாவது: ஆதம்பாக்கம் எம்ஆா்டிஎஸ் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல தேவையான பணிகளை விரைந்து நிறைவு செய்ய வேண்டும் என்று ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தினேன். அங்கு நடைபெறும் நடைமேடை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் பாதுகாப்பு ஒப்புதலைப் பெற்று ரயில்கள் நிற்பதை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன். மேலும், பாதுகாப்பு நடைமுறைகள் நிறைவடைந்தவுடன் வேகக் கட்டுப்பாடுகளை மறுஆய்வு செய்யவும், புழுதிவாக்கம் எம்ஆா்டிஎஸ் ரயில் நிலையத்தில் மின்-படிக்கட்டுகள் (எஸ்கலேட்டா்) உள்ளிட்ட பயணிகளுக்கான வசதிகளை விரைந்து ஏற்படுத்தவும் வலியுறுத்தினேன் என்றாா்.