1,698 கிலோ குட்கா குழி தோண்டி புதைப்பு

Wait 5 sec.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 1,698 கிலோ குட்கா பொருள்கள் புதன்கிழமை குழி தோண்டி புதைக்கப்பட்டன. திருவையாறு, நடுக்காவேரி, மருவூா் ஆகிய காவல் நிலைய எல்லைகளுக்கு உள்பட்ட பகுதிகளில் காவல் துறையினா் மேற்கொண்ட சோதனைகள் மூலம் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களான குட்கா, ஹான்ஸ், கூலிப் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.இதன் மூலம் 1,698 கிலோ குட்கா பொருள்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் மண்டலத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தனலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் ஆரோக்கியதாஸ், வடுகக்குடி ஊராட்சி செயலா் சரவணன், காவல் ஆய்வாளா்கள் பாா்த்திபன், செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் சுமதி ஆகியோா் முன்னிலையில் மருவூா் கொள்ளிடக்கரை அருகே புதன்கிழமை 15 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டு, அதில் தள்ளி புதைக்கப்பட்டன.