நிலச்சரிவால் சார்தாம் யாத்திரை இரு நாள்கள் நிறுத்தம்!

Wait 5 sec.

உத்தரகாண்டில் கனமழை காரணமாக சார்தாம் யாத்திரை இரு நாள்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக யாத்திரை செல்லும் வழிப் பாதைகள் தடைபட்டு, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சார்தாம் யாத்திரை இரு நாள்கள் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கார்வால் பகுதி ஆணையர் ஆனந்த் ஸ்வரூப் கூறினார். மேலும், “தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் யாத்திரை மேற்கொள்ளும் பாதையில் பல பகுதிகள் தடைபட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் கனமழை வர வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது. வழிப் பாதை சீரமைக்கப்பட்டு, வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னர் சார்தாம் யாத்திரை மீண்டும் தொடரும்” என்றும் அவர் தெரிவித்தார். உத்தரகாண்ட் முழுவதும் நேற்று முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில், யமுனோத்ரி செல்லும் யாத்திரைப் பாதை சேதமடைந்துள்ளது. அதேபோல, பல மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் புதன் வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளனர். உத்தரகாசி மாவட்டத்தில் யமுனோத்ரிக்கு செல்லும் பாதையின் ஒரு பகுதி, ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் இடிந்து விழுந்தது. ராமர் கோவிலுக்கு அருகேயுள்ள இப்பகுதி சேதமடைந்ததால் அவ்வழியே பக்தர்கள் செல்வது பாதுகாப்பற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.The Char Dham Yatra in Uttarakhand has been suspended for two days due to heavy rains.பாஜகவுக்குள் மிகப்பெரிய வினாத்தாள் மோசடி கும்பல் செயல்படுகிறது: சஞ்சய் ராவத்!