இ20 மக்கள் கட்சிக்குப் பெருகும் ஆதரவு! 4 லட்சத்தைக் கடந்த பின்தொடர்வோர்!

Wait 5 sec.

புதிதாகத் தொடங்கப்பட்ட இ20 மக்கள் கட்சியின் இன்ஸ்டாகிராம் கணக்கைப் பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை இன்று (ஜூலை 28) 4 லட்சத்தைக் கடந்துள்ளது.நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, எத்தனால் கலப்பில்லாத எரிபொருள் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இ20 மக்கள் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.எரிபொருள் நிலையங்களில், மக்களுக்கு இ20 கலக்கப்படாத பெட்ரோல் வாங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதவி விலகக் கோரியும், இந்த இ20 மக்கள் கட்சி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) தொடங்கப்பட்ட இந்தக் கட்சியின் இன்ஸ்டாகிராம் கணக்கை இன்று காலை 12 மணி நேர நிலவரப்படி, நான்கு லட்சத்துக்கும் மேலானோர் பின் தொடர்ந்துள்ளனர். எக்ஸ் பக்கத்தில் இதுவரை 55 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர்பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை நாள்தோறும அதிகரித்துக் கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.The number of followers on the newly launched Instagram account of the E20 Makkal Katchi crossed 400,000 today (July 28).பாஜகவுக்குள் மிகப்பெரிய வினாத்தாள் மோசடி கும்பல் செயல்படுகிறது: சஞ்சய் ராவத்!