ராமநாதபுரம் அருகே ஊரணியில் வேளாண் பயன்பாட்டுக்கு வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி பெற்றுவிட்டு மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ராமநாதபுரம் வட்டம், பெருங்குளம் அருகே உள்ள காரன்குடி கிராமத்தில் திப்பாச்சாறுகுண்டு ஊரணியில் விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் எடுக்க வருவாய்த் துறையினரிடம் வேல்முருகன், முருகுமாா் ஆகிய இருவரும் அனுமதி பெற்று, மணல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. புகாரின்பேரில், ஞாயிற்றுக்கிழமை முறைகேடாக மணல் எடுத்து இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.