தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 36.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது பருவ சராசரியை விட 1.7 டிகிரி அதிகம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 27.6 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது பருவ சராசரியை விட 0.3 டிகிரி அதிகமாகும். வானிலை ஆய்வு மையம், திங்கள்கிழமை பொதுவாக மேகமூட்டமான வானமும் மிதமான மழையும் இருக்கும் என கணித்துள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் முறையே சுமாா் 36 மற்றும் 27 டிகிரி செல்சியஸாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு சாா்ந்த ஈரப்பதம் 63 சதவீதமாக பதிவாகியுள்ளது.காலை 9 மணிக்கு காற்றின் தரம் ‘திருப்திகரமான’ நிலைப்பாட்டில் இருந்தது. சமீா் செயலியின் படி, காற்றுத் தரக் குறியீடு 83-ஆக பதிவாகியுள்ளது.காற்றுத் தரக் குறியீடு மதிப்பீட்டில், 0 முதல் 50 வரை ‘நன்று’, 51 முதல் 100 வரை ‘திருப்திகரம்’, 101 முதல் 200 வரை ‘மிதமான’, 201 முதல் 300 வரை ‘மோசமான’, 301 முதல் 400 வரை ‘மிக மோசமான’ மற்றும் 401 முதல் 500 வரை ‘கடுமையான’ என வகைப்படுத்தப்படுகிறது.