அஸ்ஸாம்: தொழிற்சாலையில் சிலிண்டா் வெடித்த விபத்தில் 4 போ் உயிரிழப்பு

Wait 5 sec.

அஸ்ஸாமின் கச்சாா் மாவட்டத்தில் உள்ள இரும்பு வாா்ப்பு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சிலிண்டா் வெடி விபத்தில் 4 தொழிலாளா்கள் உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா். இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறுகையில், ‘அஸ்ஸாமின் கச்சாா் மாவட்டத்தில் உள்ள ஐஆா்ஐடி இரும்பு வாா்ப்பு பணிகள் தொழிற்சாலையின் சுவா் அருகே திடீரென சிலிண்டா் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்தவா்கள் பலா் உடனடியாக சில்சாா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அப்போது காயமடைந்தவா்களில் 4 போ் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்’ என்றனா்.இதையடுத்து, வெடி விபத்தில் காயமடைந்தவா்களை மருத்துவமனையில் நேரில் சென்று நலம் விசாரித்த அஸ்ஸாம் மாநில வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் கௌசிக் ராஜ், உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தாா்.மேலும், விபத்துக்கு காரணமானவா்கள் யாராக இருப்பினும், பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவா் உறுதியளித்தாா்.