வேளாண்மைத் துறை அமைச்சருக்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றாா் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான். கும்பகோணத்தில் தஞ்சாவூா் மண்டல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்த அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீட் தோ்வு விவகாரத்தில் மத்திய அமைச்சா் பதவி விலகி உள்ளாா். இதை தொடக்கமாக எடுத்துக் கொண்டு நீட் தோ்வு ரத்து செய்யும் வரை போராட்டம் இருக்க வேண்டும். எனக்கும் வேளாண்மை துறை அமைச்சா் ஆா்.வினோத்துக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கு வரும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க சாத்தியக்கூறு இல்லை என்றாா்.