நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து அவையில் விவாதிக்க வேண்டும்! திருச்சி சிவா

Wait 5 sec.

நீட் தேர்வு ரத்து குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று திருச்சி சிவா எம்.பி. அவசர விவாதத்திற்கான நோட்டீஸ் வழங்கியுள்ளார். நீட் தேர்வது வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் 18க்கும் மேற்பட்டோர் இந்த விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இளைஞர்கள் தொடங்கிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, தில்லியில் ஒரு மாபெரும் போராட்டத்த்தை முன்னெடுத்து சாதித்தும் காட்டியுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் அவசரமாக விவாதிக்க வேண்டும் என மாநிலங்களவையில் எம்.பி. திருச்சி சிவா இன்று நோட்டீஸ் வழங்கியுள்ளார். நூற்றுக்கணக்கான இளைஞர்களின் உயிரைப் பலிவாங்கியும் குடும்பங்களைச் சிதைத்தும் மருத்துவர்களாக வேண்டும் என்ற கிராமப்புற ஏழை மாணவர்களின் கனவுகளைச் சீர்குலைத்தும் வரும் பேரழிவுமிக்க நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதேபோல மேக்கேதாட்டு விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இரு அவைகளிலும் நோட்டீஸ் வழங்கியுள்ளார். DMK MP Tiruchi Siva has given Suspension of Business for neet exam cancellationபிகார், அசாம் இளைஞர்கள் மீதான வழக்குகள் வாபஸ்; மற்ற மாநிலங்களிலும்...! சிஜேபி எச்சரிக்கை