பாஜகவுக்குள் மிகப்பெரிய வினாத்தாள் மோசடி கும்பல் செயல்படுகிறது: சஞ்சய் ராவத்!

Wait 5 sec.

நாடாளுமன்றத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா குறித்து மத்திய அரசை சிவசேனை எம்பி சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்துள்ளார். தலைநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, மாணவர்கள் ஏற்கெனவே மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டிய மாநிலங்களவை உறுப்பினர், முன்மொழியப்பட்ட இந்தச் சட்ட மசோதாவை, கடுமையான அபராதங்களைக் கொண்ட "அதே பழைய மசோதா" என்று விமர்சித்தார்.வினாத்தாள் கசிவு தடுப்பு விவகாரம் குறித்து நிச்சயமாக விவாதங்கள் நடைபெறும், ஆனால், வினாத்தாள் கசிவுக்கு எதிரான உலகின் மிகப்பெரிய போராட்டம் இந்தியாவில் உள்ள ஜந்தர் மந்தரில்தான் நடைபெற்றது. இப்போது புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பிரதமர் மோடி மிகப்பெரிய சாதனையாகக் கருதுவதாகத் தெரிகிறது. இது அதே பழைய மசோதா தான். இதில் மாறியதெல்லாம் சிறைத்தண்டனை காலம் ஓராண்டிலிருந்து பத்து ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதும், அபராதத் தொகை ரூ. 1 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக அதிகரிக்கப்பட்டதும்தான் என்று அவர் கூறினார்.முக்கிய கல்வி அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் நியமனங்கள் குறித்து கேள்வி எழுப்பிய ராவத், பாஜகவுக்குள்ளேயே மிகப்பெரிய வினாத்தாள் கசிவு மோசடி கும்பல் செயல்படுகிறது. மகாராஷ்டிரத்தில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் பாஜகவுடன் தொடர்புடையவர்களே. துணைவேந்தர்களை நியமிப்பவர்கள் நீங்கள்தான். நீட் போன்ற தேர்வுகளை நிர்வகிக்கும் முக்கிய கல்வி வாரியங்களில் உங்கள் ஆட்களே பதவிகளில் உள்ளனர். எனவே, அவர்கள் கூட்டுச் சேர்ந்து இத்தகைய செயல்களைச் செய்கிறார்கள். இனியும் செய்வார்கள். வெறும் மசோதாவை அறிமுகப்படுத்துவதால் எந்தப் பயனும் ஏற்படாது என்று குற்றம் சாட்டினார்.மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் திங்களன்று மக்களவையில் பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா 2026-ஐ அறிமுகப்படுத்தினார். இதற்கிடையில், பொதுத் தேர்வுகள் (முறையற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) திருத்த மசோதா, 2026 குறித்து செவ்வாய்க்கிழமை மக்களவையில் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா, கே.சி. வேணுகோபால் மற்றும் கௌரவ் கோகோய் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைக் காங்கிரஸ் கட்சி தயார்ப்படுத்தியுள்ளதாக இந்தியா கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Launching a sharp attack on the Central government over the newly introduced anti-paper leak Bill, Shiv Sena (UBT) MP Sanjay Raut on Tuesday alleged that the "biggest paper leak racket" operates within the Bharatiya Janata Party (BJP), asserting that merely passing a law will not resolve the issue.அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்! கவனத்தில் கொள்ளுமா தமிழக அரசு?