நடிகர் தனுஷ் பிறந்த நாளில் அவரை தலைவர் எனக் குறிப்பிட்டு போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, லப்பர் பந்து இயக்குநர் இயக்கத்திலும் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் தமிழ் முருகன் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். மேலும், பல திரைப்பட இயக்குநர்கள் தனுஷுக்குக் கதை கூறி வருகின்றனர்.இந்த நிலையில், தனுஷின் பிறந்த நானான இன்று பொது போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், வழக்கத்திற்கு மாறாக, தலைவர் தனுஷ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போஸ்டரை ஓம் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பகிர்ந்ததால் பலரும் அரசியலுக்குத் தனுஷ் வரப்போகிறார் என விமர்சித்தும் வருகின்றனர். அண்மையில், நலத்திட்ட உதவிகளை வழங்கிய தனுஷ் தன் ரசிகர்களிடம், “இங்கே இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். நம் ஒற்றுமைக்குப் பெரிய சக்தி உண்டு. அதற்கு நோக்கமும் உண்டு. சும்மா வந்தோம், என்னைச் சந்தித்தோம், புகைப்படம் எடுத்தோம் என மட்டும் இருக்கக் கூடாது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சிக்கல்களில் இருந்தால் உதவுங்கள். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்யுங்கள். அதற்கு எல்லாரும் கைகோர்க்க வேண்டும். நீங்கள் அதனைச் செய்வீர்கள் என நம்புகிறேன். என்னை இன்னும் வேகமாக ஓட வைக்கும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி... ஓம் நமச்சிவாய... ஜெ..!” எனத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தனுஷ் நடித்த ஓம் திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ!A poster referring to actor Dhanush as 'Thalaivar' (Leader) has been released on his birthday.