நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான டிரெயின் திரைப்படத்தின் சண்டைக்காட்சி மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. இயக்குநர் மிஷ்கின் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான டிரெயின் திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். முழுக்கதையும் ரயிலில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், நடிகர்கள் நாசர், ஷ்ருதி ஹாசன், யுகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஓடும் ரயில் 5 மணி நேரம் நடக்கும் ஆக்ஷன் உணர்வுப்பூர்வமான கதையாக இது உருவாகியுள்ளது. இதன் டீசர் நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் தாணு, இப்படத்தை ஆகஸ்ட் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.இந்த நிலையில், இப்படத்தின் 2 சண்டைக் காட்சியின் மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளனர். ரயில் பெட்டிக்குள் இடுங்களான பகுதிகளில் நடக்கும் மோதல்களும் இயக்குநர் மிஷ்கின் எப்படி நடிக்க வேண்டும் என சொல்லிக் கொடிப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. மிஷ்கினின் இசையமைப்பும் எடிட்டும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. Making-of video of Mysskin's train fight scene that sparks excitement!