இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! முதல்முறையாக 33 வயது ஆல்-ரவுண்டருக்கு வாய்ப்பு!

Wait 5 sec.

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்புவுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியிலும், ஆகஸ்ட் 23-ல் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 7 ஆம் தேதி பயிற்சி ஆட்டத்திலும் பங்கேற்கிறது.இந்த நிலையில், ஷுப்மான் கில் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.அணி விவரம்ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் (கீப்பர்), சாய் சுதர்சன், துருவ் ஜூரல் (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், தேவ்தத் படிக்கல், சரண்ஷ் ஜெயின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இந்த அணியில் யாரும் எதிர்பாராத வகையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயது ஆஃப்-ஸ்பின் ஆல்-ரவுண்டர் சரன்ஷ் ஜெயின் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் 2014 முதல் விளையாடி வருகிறார் சரன்ஷ் ஜெயின். சமீபத்தில் இலங்கை ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற 2-வது டெஸ் போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், 70 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக முதல் டெஸ்ட்டில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆஃப்-ஸ்பின் ஆல்-ரவுண்டரான சரன்ஷ் ஜெயினுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.Indian squad announced for the Test series against Sri Lanka - 33-year-old all-rounder gets a chance for the first time!ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெற வேண்டும்: முன்னாள் வீரர்