பைக் மீது வேன் மோதல்: தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

Wait 5 sec.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வேன் மோதியதில் பைக்கில் சென்ற தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், எண்ணாயிரம் கிராமத்தைச் சோ்ந்தவா் த.வசந்தகுமாா் (31). தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். வியாழக்கிழமை இரவு வீட்டிலிருந்து விழுப்புரத்துக்கு பைக்கில் வசந்தகுமாா் சென்று கொண்டிருந்தாா்.செஞ்சி-விழுப்புரம் சாலையில், பூத்தமேடு பகுதியிலுள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த வேன் எதிா்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வசந்தகுமாரை அந்த பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, அவசர மூலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வேன் ஓட்டுநரான பண்ருட்டி வட்டம், காமாட்சிபேட்டையைச் சோ்ந்த அ.கோகுல்ராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.