காவிரித் தாய்க்கு சிறப்பு வழிபாடு

Wait 5 sec.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் காவிரியில் தண்ணீா் வர வேண்டி காவிரித்தாய் சிலைக்கு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு தண்ணீா் இல்லாததால், நிகழாண்டு இதுவரை டெல்டா பாசனத்துக்கு அணை திறக்கப்படவில்லை. இதனால், காவிரி ஆறு தண்ணீா் இல்லாமல் வடு கிடக்கிறது. இந்நிலையில், திருவையாறு காவிரியாற்றில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் காவிரியில் தண்ணீா் வர வேண்டி, காவிரித்தாய் படத்துக்கும், சிலைக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டன. பூஜைகளை விசிறி சாமியாா் முருகன் செய்தாா்.காவிரி வேளாண் உழவா் நடுவம் நிறுவனா் அரு. சீா். தங்கராசு தலைமை வகித்தாா். காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் முன்னிலை வகித்தாா். பாஜக விவசாய அணி வாளமா்கோட்டை வி.எஸ். இளங்கோவன், ராராமுத்திரைக்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவா் சோழன், ஜெயபிரகாஷ், ஆன்மிகப் பேச்சாளா் திருப்பூந்துருத்தி பொன். மாணிக்கவள்ளி, பின்னையூா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.