ஹார்ட் பீட் தொடரில் தேஜு இல்லை! ரசிகர்கள் அதிர்ச்சி!

Wait 5 sec.

ஹார்ட் பீட் இணையத் தொடரில் இருந்து நடிகை யோகலட்சுமி விலகுவதாக அறிவித்துள்ளார்.ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஹார்ட் பீட் இணையத் தொடரின் மூன்றாம் பாகம் வரும் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.இந்தத் தொடரில் முதல் இரண்டு பாகங்களில் தேஜஸ்ரீ என்ற தேஜு பாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை யோகலட்சுமி. ஹார்ட் பீட் தொடரில் தன்னுடைய துணிச்சலான மற்றும் தனித்துவமான நடிப்பால் மக்களிடையே பிரபலமானார்.இந்த நிலையில், ஹார்ட் பீட் - 3 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து, இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும், ஹார்ட் பீட் தொடரின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.அவர், வெளியிட்டுள்ள பதிவில், “இதை ஏற்றுக்கொள்வது கடினம் என்று எனக்குத் தெரியும்.உண்மையிலேயே வருந்துகிறேன் நண்பர்களே. கனத்த இதயத்துடன் நான் ஒரு விஷயத்தைத் தெரிவிக்கிறேன். இனி நான் ஹார்ட் பீட் தொடரில் நடிக்கப்போவதில்லை. View this post on Instagram எனக்கும் இந்த முடிவு எளிதாக இருக்கவில்லை, ஆனால் இந்த வாய்ப்பிற்காக நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். என் மீது நம்பிக்கை வைத்ததற்கும், எல்லாவற்றிற்கும், தேஜுவுக்கு நன்றி.இந்தப் பயணத்தை அழகானதாக மாற்றிய ஹார்ட் பீட் தொடர் குழுவினர் அனைவருக்கும் நன்றி. தேஜுவின் சிறப்பு என்னவென்றால், அவள் பல பெண்களுக்கு உத்வேகம் அளித்து, மிகுந்த அன்பையும் மரியாதையையும் பெற்றாள். தேஜுவின் பாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். என் பயணத்தை, இவ்வளவு சிறப்பான பகுதியாக மாறியதற்கு நன்றி, தேஜு” என்று குறிப்பிட்டுள்ளார்.ஹார்ட் பீட் தொடரில் நடிகை யோகாலட்சுமி விலகியது, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Actress Yogalakshmi has announced her departure from the web series 'Heart Beat'.அடுத்த வாரம் ஹார்ட் பீட் சீசன் 3! முந்தைய இரண்டு சீசன்களின் கதைகள் என்ன? புதிதாகப் பார்ப்போருக்காக...