நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜன நாயகன் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, “உங்களின் ஹலமிதி ஹபிபோ” எனக் கூறியுள்ளார். நடிகராக விஜய்யின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் இன்று (ஜூலை 23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை எச். வினோத் இயக்க, கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரித்திருக்கிறது.இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே ஜன நாயகன் படப்பிடிப்பு புகைப்படங்களைப் பகிர்ந்து, “ரிலீஸ் தேதி இங்கே. கடைசியாக ஒருமுறை, கடைசியான ஆட்டம். உங்களின் ஹலமிதி ஹபிபோ... கல்யாணி மற்றும் வெற்றி” எனக் கூறியுள்ளார்.ஜனநாயகன் படத்தில் விஜய் வெற்றி என்ற கதாபாத்திரத்திலும் பூஜா ஹெக்டே கல்யாணி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். முன்னதாக, பீஸ்ட் படத்தில் விஜய் - பூஜா ஹெக்டே ஹலமிதி ஹபிபோ என்ற பாடலும் நடனமாடியிருப்பார்கள். இந்தப் பாடலும் நடனமும் மிகவும் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. View this post on Instagram உடைந்த இதயம் நம்பிக்கையால் சரிசெய்யப்பட்டுள்ளது... ஆலியா பட் ஆதரவு! "Your 'Halamithi Habibo'..." – Pooja Hegde on Vijay's last film!