சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவு: அன்னா ஹசாரே மௌனப் போராட்டம்!

Wait 5 sec.

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மகாராஷ்டிரத்தின் அஹில்யாநகரில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இரண்டு மணி நேர மௌனப் போராட்டத்தை மேற்கொண்டார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தனது போராட்டத்தைக் காலை 11 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணிக்கு நிறைவு செய்ததாக சமூக ஆர்வலரின் உதவியாளர் தத்தா அவாரி பிடிஐயிடம் தெரிவித்தார். அஹில்யாநகரில் உள்ள மகாத்மிக காந்தி சிலைக்கு அருகே இந்தப் போராட்டத்தை நடத்திய ஹசாரே, பின்னர் அதே மாவட்டத்தில் உள்ள தனது கிராமமான ரலேகன் சித்திக்குத் திரும்பினார். அன்னா ஹசாரே பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், வன்முறை மற்றும் காவல்துறை நடவடிக்கை செய்திகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன. போராட்டக்காரர்களின் அதிருப்தியைச் சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகப் பார்க்காமல், சமூகத்தின் வேதனையாகவும், எதிர்பார்ப்புகளாகவும் பார்க்க வேண்டும். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரப்பட்டால், அது அரசைக் கவிழ்க்காது. மாறாக அதன் செயல்பாட்டை மேலும் பொறுப்புணர்வு மிக்கதாகவும், திறமையானதாகவும் மாற்றும். போராடுபவர்களின் கருத்துக்களைப் பொறுமையுடன் கேட்கவும், நம்பிக்கையான சூழலை உருவாக்கவும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகளைக் காணவும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கடிதத்தில் எழுதியிருந்தார். Social activist Anna Hazare on Thursday observed a two-hour-long maun andolan (silent protest) at Ahilyanagar in Maharashtra to extend his support for protesting students in Delhi.பிரதமர் பதிலில் திருப்தியில்லை... தர்மேந்திர பிரதான் விலகும் வரை போராட்டம் தொடரும்! சிஜேபி