ஜனநாயகன் வெளியான திரையரங்கில் சுடச்சுட பிரியாணி! அமைச்சர்கள் அமர்க்களம்!

Wait 5 sec.

ஜனநாயகன் வெளியான திரையரங்கில் சுடச்சுட பிரியாணி! அமைச்சர்கள் அமர்க்களம்!ஜனநாயன் திரைப்படத்தைக் காண வந்த ரசிகர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி வழங்கி தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.கே. தென்னரசு , ஆர்.வீ. ரஞ்சித்குமார் ஆகியோர் ரசிகர்களுக்கு அவர்களே பரிமாறினர்.தமிழக முதல்வர் விஜய் ஜோசப் கடைசியாக நடித்த திரைப்படமான ஜனநாயகன் பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி இன்று தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் வெளியானது. விஜய் ரசிகர்கள் இதனை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். மேளம் தாளம், டிஜே நடனம் என ரசிகர்கள் திரையரங்கு முன்பு திரண்டு வந்து கொண்டாடி மகிழ்ந்தனர். அவ்வகையில் காஞ்சிபுரம் பாபு சினிமாஸ் திரையரங்கில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.கே. தென்னரசு மற்றும் ஆர்.வீ. ரஞ்சித்குமார் ஆகியோர் கட்சி நிர்வாகிகள் என பலரும் திரைப்படத்தைக் கண்டு ரசித்தனர். திரைப்படம் காண வரும் ரசிகர்கள் பசியாறும் வகையில், அமைச்சர் தென்னரசு ஏற்பாட்டின்பேரில் சிக்கன் பிரியாணி, லட்டு, ரைத்தா, கத்திரிக்காய் தொக்கு என உணவு வகைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரைப்படம் பார்த்த ரசிகர்களுக்கு, அமைச்சர்கள் இருவரும் தங்கள் கைகளால் பிரியாணி பரிமாறினர்.மேலும் வனத்துறை அமைச்சர் சார்பில் ரசிகர்களுக்கு சுற்றுச்சூழலை மேம்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் வகையில் மரக்கன்றுகளுக்கு வழங்கினர்.