விக்ராந்தின் எல்பிடபிள்யூ இணையத் தொடர் 120 எபிசோடுகளுடன் நிறைவு!

Wait 5 sec.

நடிகர் விக்ராந்தின் எல்பிடபிள்யூ இணையத் தொடர் 120 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வியாழன்தோறும் எல்பிடபிள்யூ இணையத் தொடர் ஒளிபரப்பாகி வந்தது.இந்தத் தொடரை அருணா ராக்கி எழுதி, கணேஷ் கார்த்திகேயன் இயக்கியிருந்தார். ‘ஹார்ட் பீட்’ தொடரை தயாரிக்கும் அட்லீ பேக்டரி நிறுவனம் இந்தத் தொடரையும் தயாரித்து வந்தது.மேலும், இந்தத் தொடரில் சிந்து ஷியாம், நியதி, ஹரிஷ், அயாஸ் கான், அக்‌ஷிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக இருந்த விக்ராந்த், சில பிரச்னைகள் காரணமாக தனது புகழை இழக்கிறார். பின்னர், அவரே ஒரு கிரிக்கெட் குழுவை உருவாக்கி பயிற்சியாளராக எப்படி வென்றார் என்பதை மையப்படுத்தி எல்பிடபுள்யூ தொடர் எடுக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், 'எல்பிடபிள்யூ- லவ் பியாண்ட் விக்கெட்' இணையத் தொடர், இந்த வார எபிசோடுகளுடன் இன்று(ஜூலை 23) நிறைவடைந்தது.அடுத்த வாரம் வியாழந்தோறும் ஹார்ட் பீட் தொடரின் 3 ஆம் பாகம் ஒளிபரப்பு செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Actor Vikranth's web series 'LBW' concluded with 120 episodes.அடுத்த வாரம் ஹார்ட் பீட் சீசன் 3! முந்தைய இரண்டு சீசன்களின் கதைகள் என்ன? புதிதாகப் பார்ப்போருக்காக...