தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக கைது செய்யப்பட்ட இளைஞர், காவல்துறையினர் அடித்ததில் மரணம் அடைந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.தூத்துக்குடியில் அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் (வயது 26), அப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் பணியாற்றி வந்தார். அவர் டாஸ்மாக்கிலிருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து, கடை அடைத்தபிறகு கூடுதல் விலைக்கு விற்று வந்ததாக புகார் எழுந்தது.இதையடுத்து, சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாக கடந்த 17 ஆம் தேதி காலை அருணாச்சலத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இந்த நிலையில், அன்று மாலையே தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காயங்களுடன் அருணாச்சலத்தை காவல்துறையினர் அனுமதித்ததாக கூறப்படுகிறது.தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த 7 நாள்களாக அருணாச்சலத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரை காவலர்கள் அழைத்துச் சென்றபோது காயம் ஏதும் இல்லையென்றும், ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தலை, கை, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் காயம் இருந்ததாகவும் உறவினர்கள் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.மேலும், காவலர்கள் தாக்கியதால்தான் அருணாச்சலம் உயிரிழந்ததாக தெரிவித்து, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.காவல்துறை விளக்கம்இந்த நிலையில், கைதி அருணாச்சலம் காவலர்கள் தாக்கியதால் உயிரிழக்கவில்லை என்று நகர காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் விளக்கம் அளித்துள்ளார்.காவல் நிலையத்துக்கு அருணாச்சலத்தை அழைத்து வந்தவுடன் அவர் மயங்கி விருந்தார். உடனடியாக உறவினர்களுக்கு தகவலளித்து மருத்துவனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கே மீண்டும் அவர் மயங்கி விழுந்தார்.அருணாச்சலத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் தலையில் கட்டி இருந்ததாக தெரிவித்தார்கள். அவரைக் காவலர்கள் யாரும் அடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.Custodial death in Thoothukudi - Police clarificationகாரணம் கூறாமல் 3 மாதம் சிறை! தில்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்!