இந்திய பாட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து சீனா ஓபனில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் சீன வீராங்கனையிடம் தோல்வியுற்றார். முன்னதாக, ஜப்பான் ஓபனில் பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக கோப்பை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றான இதில் பிவி சிந்து 21-16, 20-22, 18-21 என்ற கேம்களில் சீன வீராங்கனை சென் யூஃபியிடம் தோல்வியடைந்தார். இந்தப் போட்டி ஒரு மணி நேரம் 30 நிமிஷங்கள் நீடித்தது. முதல் கேமிலும் 7-13லிருந்து 16-16 என முன்னேறி, பின்னட் முதல் கேமை வென்றார். பின்னர், அடுத்த கேம்களிலும் இறுதிவரை போராடி தோல்வியுற்றார். 30 வயதான பிவி சிந்து ஜப்பான் ஓபனில் நீண்ட மாதங்களான கோப்பை வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். நல்ல மனநிலையில் இந்தத் தொடருக்கு வந்திருந்தாலும் போராடி தோல்வியுற்றார். டோக்யோ ஒலிம்பிக்ஸில் (2021) சென் யூஃபி தங்கம் வென்றிருந்தார். இரண்டாவது கேமில் 16-20 என இருந்து, 22-20 என மாற்றி வென்றார். இறுதி கேமிலும் போட்டி சமமாகவே இருந்தது. இதில் 17-17 என இருந்தது. அங்கிருந்து சென் யூஃபி வென்றார்.Home crowd favourite Chen Yu Fei goes up against Pusarla V. Sindhu .#BWFWorldTour #ChinaOpen2026 pic.twitter.com/0DbFiCF7ZY— BWF (@bwfmedia) July 23, 2026மெஸ்ஸி இல்லாமலேயே வென்ற இன்டர் மியாமி: எப்போது அமெரிக்கா திரும்புவார்?P V Sindhu bows out early from China Open