இந்திய கடற்படையில் பட்டதாரிகளுக்கு அதிகாரிப் பணிகள்; காலியிடங்கள் - 275

Wait 5 sec.

ஜூன் 2027-ல் தொடங்கவுள்ள எஸ்எஸ்சி பயிற்சிக்கு ஜூலை 27-க்குள் இணையவழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கேரள மாநிலம், எழிமலையில் உள்ள இந்தியக் கடற்படை அகாடமியில் ஜூன் 2027 முதல் தொடங்கவுள்ள 'ஷார்ட் சர்வீஸ் கமிஷன்' (எஸ்எஸ்சி) பயிற்சியுடன் கூடிய பணிக்கு, தகுதியுள்ள திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் இந்திய அரசு நிர்ணயித்துள்ள குடியுரிமை நிபந்தனைகளை பெற்றவராக இருக்க வேண்டும். பணி: Short Service Commision Officer (SSC Jun - 2027)காலியிடங்கள்: 275பிரிவு மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. Executive Branch (GS(X)/ Hydro Cadre) - 902. Pilot - 253. Naval Air Operations Officer (Observers) - 184. Air Traffic Controller (ATC) - 155. Logistics - 106. Naval Armament Inspectorate Cadre (NAIC) - 147. Education - 58. Engineering Branch (General Service (GS)-249. Submarine Tech Engineering - 810. Electrical Branch (General Service (GS)) - 3211. Submarine Tech Electrical - 813. Naval Constructor - 18தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உதவித் தொகை: பயிற்சியின் போது உதவித் தொகையும், பயிற்சிக்குப் பின் இந்திய கடற்படையில் சப்-லெப்டினன்ட் பணியுடன் மாதம் ரூ.1,20,000 சம்பளமும் வழங்கப்படும்.தேர்வு செய்யப்படும் முறை: சம்பந்தப்பட்ட படிப்பில் விண்ணப்பதாரர்கள் பெற்றுள்ள மதிப் பெண்கள், நேர்முகத்தேர்வு, மருத்துவ தகுதித்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு கேரள மாநிலம் எழிமலாவிலுள்ள இந்திய கடற்படை கல்லூரியில் 2 வருடங்கள் பயிற்சி வழங்கப்படும். பின்னர் இந்திய கடற்படையில் நிரந்தர பணி வழங்கப்படும். பயிற்சி ஜூன் மாதம் (2027) ஆரம்பமாகும்.நேர்முகத்தேர்வு தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக் கப்படும். என்சிசி பயிற்சி பெற்றவர் களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.7. 2026இந்திய கடற்படை அதிகாரிகளால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளவும். பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். Applications are invited from eligible unmarried men and unmarried women candidates for grant of Short Service Commission (SSC) for course commencing Jun 2027 onwards at Indian Naval Academy