சென்னையில் ஜன நாயகன் பார்க்க வந்த கீர்த்தி சுரேஷ், விஜய் பாதுகாவலர்!

Wait 5 sec.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள திரையரங்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் காட்சியைக் கண்டு ரசித்தார். இதேபோன்று விஜய்யின் தனிப்பட்ட பாதுகாவலரும் திரையரங்கிற்கு வந்தார். விஜய்யின் ரசிகர்கள் பலர் அவரை சூழ்ந்துகொண்டு செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இயக்குர் எச். வினோத் - விஜய் கூட்டணியில் உருவான ஜனநாயகன் திரைப்படம் பல்வேறு பிரச்னைகளைக் கடந்து இன்று (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியானது.தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல்நாள் முதல் காட்சி திரையிடப்பட்டது. மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் அதிகாலை 4.30 மணிக்கே ஜன நாயகன் திரையிடப்பட்டது.தமிழ்நாட்டில் கோவையில் மட்டும் காலை 7 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. இதனிடையே சென்னையில் முதல் காட்சியைக் காண நடிகை கீர்த்தி சுரேஷ் குரோம்பேட்டை திரையரங்கிற்கு வந்துள்ளார். இதுமட்டுமின்றி நடிகர் சரத்குமார், இசையமைப்பாளர் அனிருத், விஜய்யின் தனிப்பட்ட பாதுகாவலர் ஆகியோரும் படம் பார்க்க வருகைப்புரிந்தனர்.ஜன நாயகன் திரைப்படத்திற்கு சென்சார் பிரச்சினையால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. சட்டவிரோதமாக இணையதளங்களில் படம் வெளியானது. அடுத்தடுத்து எழுந்த பிரச்னைகளால் படம் வெளியாகுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இன்று திட்டமிட்டபடி வெளியானது.விஜய்யின் இறுதியான படமென்பதால் உலகளவில் 3000 திரைகளுக்கு மேல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் வெளியானது.தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஜோசப் விஜய்! ஜன நாயகனில் வரவேற்பைப் பெயர் டைட்டில்!Keerthy Suresh and Vijay's bodyguard watched Jananayagan in Chennai