புதுக்கோட்டை: முதல்வர் ச. ஜோசப் விஜய் நடித்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான 'ஜன நாயகன்' திரைப்படத்தை புதுக்கோட்டை விஜய் திரையரங்கில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் காட்சியை மாநிலத் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் பார்த்தார். படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அமைச்சர் பர்வேஸ் கண்ணீர் விட்டு அழுதார்.இதுதான் தனது கடைசிப் படம் என விஜய் அறிவித்துள்ளதால், நீண்ட கால ரசிகரான பர்வேஸ் உணர்ச்சிவயப்பட்டு அழுததாக தவெகவினர் தெரிவித்தனர். புதுக்கோட்டை மாநகரில் விஜய், ஆர்கேபி, சாந்தி ஆகிய மூன்று திரையரங்குகளிலும் ஜனநாயகன் திரையிடப்பட்டுள்ளது. காலை 9 மணிக்குத் தொடங்கிய முதல் காட்சியை ஏராளமான ரசிகர்கள் உற்சாகமாக ஆட்டம், பாட்டத்துடன் பார்க்க வந்தனர். Minister Parvez shed tears after watching the movie Jana Nayaganநெல்லையில் களைகட்டிய ஜன நாயகன்! ரசிகர்கள் கொண்டாட்டம்!!