தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை நியாயமனது!

Wait 5 sec.

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மாணவர்களின் கோரிக்கை நியாயமானது எனவும் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூலை 23) தெரிவித்தார். மாணவர்களிடன் அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிகை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். நீட் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்திருந்தார். அவரின் இந்த பதிவைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது:இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கியவர்களில் நீங்களும் ஒருவர். கல்வி அமைப்பு முழுமையாகக் கைப்பற்றப்படுவதையும் அழிக்கப்படுவதையும் நீங்கள் அனுமதித்து ஊக்குவித்தீர்கள்; அத்துடன், அதற்குப் பொறுப்பான ஒவ்வொருவரையும் பாதுகாத்தீர்கள்.மாணவர்களின் கோரிக்கை மிகவும் தெளிவானது.தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். You are the one who has harmed the future of our youth the most. You allowed and encouraged the total capture and destruction of our education system - and protected every person responsible for it.The students’ demands are clear:1. Sack Dharmendra Pradhan.2. Apologise to… https://t.co/0MK4wPMNiK— Rahul Gandhi (@RahulGandhi) July 23, 2026நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடிSack Dharmendra Pradhan Apologise to the students says Rahul Gandhi