‘மிஸ் பண்ணுவேன் அண்ணா...’ஜன நாயகன் படம் பார்த்து வருண் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!

Wait 5 sec.

முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் படம் பார்த்து கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.இயக்குநர் அ. வினோத் - விஜய் கூட்டணியில் உருவான 'ஜன நாயகன்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே, கடந்த ஜன. 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் பிரச்னைகளால் படம் வெளிவர முடியாமல் போனது.பல்வேறு தடைகளைக் கடந்து ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியதைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை உலகளவில் 8,000-க்கும் மேற்பட்ட திரைகளில் மிகப் பிரமாண்டமாக வெளியானது. படத்தின் டைட்டில் கார்டில் ’மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்’ நடிப்பில் எனத் திரையில் வரும்போது, அவரது ரசிகர்களும் தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர்.இந்த நிலையில், முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகரும் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளருமான வருண் சக்ரவர்த்தி, ஜனநாயகன் படம் பார்த்துவிட்டு நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்தப் பதிவில், “ஜனநாயகன்!! என்னவொரு பிரியாவிடைப் படம்!! ஒவ்வொரு விநாடியும் பிடித்திருந்தது!! ரசிகர்ளுக்காக இவ்வளவுத் தருணங்களைக் கொண்ட இந்தப் படத்துக்காக இயக்குநர் அ. வினோத் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!!அனைத்திற்கும் நன்றி அண்ணா... காதலுக்கு மரியாதை படத்தில் இருந்து நான் உங்களுடைய ரசிகன். சிறுவயது முதலே எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்துள்ளீர்கள். உங்களை மிஸ் பண்ணுவேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.Team India star bowler pens emotional message after watching Thalapathy Vijay's farewell film