சர்வதேச கிரிக்கெட்டில் முதல் அரைசதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி!

Wait 5 sec.

சர்வதேச கிரிக்கெட்டில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்துள்ளார்.இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான முதல் டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூலை 23) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே அணி முதலில் விளையாடியது.சர்வதேச கிரிக்கெட்டில் முதல் அரைசதம்!முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். அபிஷேக் சர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி 18 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் இது அவரது முதல் அரைசதமாகும்.அதிரடியாக விளையாடிய அவர் 19 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினார்.இருப்பினும், ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே அவர் அரைசதம் விளாசி இந்தத் தொடரை சிறப்பாகத் தொடங்கியுள்ளார்.Young player Vaibhav Suryavanshi has recorded his maiden half-century in international cricket.ஓவலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! ஐசிசி அறிவிப்பு!