ஈரானுக்கு ஆதரவாகப் போரில் களமிறங்கும் ஹவுதிகள்! சௌதி கப்பல்கள் மீது தாக்குதல்!

Wait 5 sec.

செங்கடல் பகுதியில் சௌதி அரேபியாவின் எண்ணெய்க் கப்பல்கள் மீது யேமனின் ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இருதரப்பும் மீண்டும் போர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், ஈரானுக்கு ஆதரவாக செங்கடல் பகுதியில் சென்ற சௌதி அரேபியாவுக்குச் சொந்தமான 2 எண்ணெய்க் கப்பல்கள் மீது யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் வியாழக்கிழமை (ஜூலை 23) தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலினால், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரில் புதிய பிரிவு உருவாக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்ற வேண்டுமெனும் நோக்கில் அமெரிக்கா தொடர்ந்து 12 நாள்களாக ஈரானின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதனிடையே, பெரும்பாலான செங்கடல் பகுதியைக் கட்டுப்படுத்தி வரும் ஹவுதிகள் சௌதி கப்பல்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது சர்வதேச அளவில் எரிபொருள் விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹவுதிகள் களமிறங்கினால் அமெரிக்காவுக்கு ஆதாரவாக மீண்டும் இஸ்ரேலிய படைகள் போர் தாக்குதல்களில் ஈடுபடும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், ஹவுதிகளின் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. ஏற்கெனவே, அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக சௌதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு!Yemen's Houthis have attacked Saudi Arabian commercial ships in the Red Sea.