முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியானது. முதல்வர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக ஜன நாயகன் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. முதல்வராக பதவியேற்றதால் படத்தில் விஜய் பெயர் இடம்பெறும் டைட்டில் கார்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ச. ஜோசப் விஜய் எனப் போடப்பட்டுள்ளது.தமிழகத்தில் 1000 திரைகளுக்கு மேல், உலகளவில் 3000க்கும் அதிகமாக திரைகள் என பிரம்மாண்ட வெளியீட்டைக் கண்டுள்ளது. மேலும், தமிழகம் உள்பட பல பகுதிகளிலும் டிக்கெட் விற்பனைகள் மிகத் தீவிரமாக நடைபெற்றதால் முதல் நாள் வசூலாக இப்படம் ரூ. 160 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கலாம் எனத் தெரிகிறது. இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் இணைய தளங்களில் வெளியானது போல், தற்போது மீண்டும் அதன் திரையரங்க வடிவம் இணையத்தில் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ரசிகர்கள் முதல்வர் திரைப்படத்தையே சட்ட விரோதமாக இணையத்தில் பதிவேற்றுகிறார்கள் பதிவிட்டு வருகின்றனர். முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? ஜன நாயகன் - திரை விமர்சனம்!Vijay's film Jananayagan has been released online again.