மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் அசத்தல்; இந்தியாவுக்கு 126 ரன்கள் இலக்கு!

Wait 5 sec.

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான முதல் டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூலை 23) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே அணி முதலில் விளையாடியது.மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் அசத்தல்; இந்தியாவுக்கு 126 ரன்கள் இலக்கு!முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது.அந்த அணியில் அதிகபட்சமாக வெஸ்லி மத்வீர் 34 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மருமானி 27 ரன்களும், ரியான் பர்ல் 26 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை.இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மயங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். ஷிவம் துபே மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.Batting first in the first T20 match against India, Zimbabwe scored 125 runs for the loss of 7 wickets.ஓவலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! ஐசிசி அறிவிப்பு!