ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான விருதினை இங்கிலாந்து வீராங்கனை டேனி வியாட் ஹாட்ஜ் வென்றுள்ளார்.ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் கேத்ரின் பிரைஸ், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரீ சரணி மற்றும் இங்கிலாந்து வீராங்கனை டேனி வியாட் ஹாட்ஜ் இடம்பெற்றனர். இவர்கள் மூவரில் டேனி வியாட் ஹாட்ஜ் இந்த விருதினை வென்று அசத்தியுள்ளார்.அண்மையில் நிறைவடைந்த மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேனி வியாட் ஹாட்ஜ், இங்கிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேற உதவினார். நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் 302 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாகவும் மாறினார்.இலங்கைக்கு எதிரானப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 62 பந்துகளில் 105* ரன்கள் எடுத்து அசத்தினார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 65 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிராக 89 ரன்களும் அவர் எடுத்தார்.ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான விருதினை வென்றது குறித்து அவர் பேசியதாவது: சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு, ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதினை வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. லார்ட்ஸ் திடலில் இறுதிப்போட்டியில் விளையாடியதை நினைத்து நான் என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியடைவேன் என்றார்.England's Danni Wyatt-Hodge has won the ICC Women's Player of the Month award for June.ஐசிசி ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதை வென்ற நாதன் ஸ்மித்!