ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி உககக் கோப்பை தோல்விக்குப் பிறகு தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடன் கூடுதல் நேரத்தில் ஒரு கோலை விட்டுக்கொடுத்து 0-1 என தோல்வியடைந்தது. அமெரிக்காவில் இருந்து தனி விமானம் மூலமாக ஃபுளோரிடாவில் இருந்து மெஸ்ஸி தனது குடும்பத்துடன் ஆர்ஜென்டீனாவில் உள்ள தனது சொந்த ஊரான ரொஸாரியோவுக்கு அருகில் தரையிறங்கினார். அங்கிருந்து காரின் மூலமாக மெஸ்ஸி தனது வீட்டிற்குச் சென்றடைந்தார். இந்த உலகக் கோப்பைய்லில் மெஸ்ஸி 8 கோல்கள், 4 அசிஸ்ட் செய்து தங்கக் காலணி விருதில் இரண்டாமிடம் பிடித்தார். தங்கப் பந்து விருது கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு கோல் ஒரு அசிஸ்ட்கூட செய்யாத ரோட்ரிக்கு அந்த விருது சென்றது. படைப்பாற்றல் திறன் விருதும் 0.3 புள்ளிகள் வித்தியாத்தில் மைக்கேல் ஒலிஸேவிடம் சென்றது. கடைசி ஒரு போட்டியில் மெஸ்ஸி மேஜிக் நிகழ்த்திருந்தால் அனைத்துமே அவர் வசம் வந்திருக்க வேண்டியது. ஒரு தோல்வியால் மெஸ்ஸி பல விருதுகளையும் உலகக் கோப்பையையும் இழந்துள்ளார். மெஸ்ஸியின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறப்படுகிறது. எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணியில் விளையாடும் மெஸ்ஸி ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் மீண்டும் அமெரிக்காவுக்கு செல்லவிருக்கிறார். உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் 2014, 2022, 2026ல் விளையாடி இருக்கிறார். இதில் 2022ல் மட்டுமே கோப்பை வெல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. : Leo Messi has arrived in Rosario, Argentina.— @SC_ESPN pic.twitter.com/GPifGoLT3W— The Touchline | (@TouchlineX) July 21, 2026மெஸ்ஸி புறக்கணிப்பு? ஒரு கோல், அசிஸ்ட்கூட செய்யாத ரோட்ரிக்கு தங்கப் பந்து விருது நியாயமா? Messi returns to Argentina for rest after World Cup final loss to Spain