சிஜேபி போராட்டத்துக்கு இடையில் புதிய உயர்கல்வி செயலர்! யார் இந்த நரேஷ் பால் கங்வார்?

Wait 5 sec.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் சூழலில் மத்திய கல்வி அமைச்சகத்துக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி, தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் செயலர் வினீத் ஜோஷி வியாழக்கிழமை மாற்றப்பட்டார்.மேலும், மத்திய கால்நடை பராமரிப்புத் துறைச் செயலராக இருந்த நரேஷ் பால் கங்வார், உயர்கல்வி துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பள்ளிக் கல்வித் துறைச் செயலராக டி.கே. அனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.யார் இந்த நரேஷ் பால் கங்வார்?மத்திய கல்வி அமைச்சகத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்திருக்கும் சூழலில், புதிய செயலர் மாற்றப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.1994 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான நரேஷ் கங்வார், ராஜஸ்தான் மாநில அரசு மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.ஐஐடியில் இளநிலை மற்றும் முதிநிலை மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் படிப்பை முடித்துள்ள இவர், பொருளாதாரத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.தொடக்கத்தில் ராஜஸ்தானின் பல்வேறு மாவட்டத்தில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார்.கல்வித் துறை நிர்வாக அனுபவம்2014 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில பள்ளிக் கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், நீண்ட காலம் கல்வித்துறையில் பணியாற்றியுள்ளார். கல்விசார் கொள்கைகளை வகுப்பதிலும் அனுபவர் பெற்றவர்.ராஜஸ்தான் அரசில் ஏறக்குறைய 20 ஆண்டுகள் பணிக்குப் பிறகு, 2020-ல் மத்திய அரசுப் பணிக்கு நரேஷ் மாற்றப்பட்டார்.சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் இணைச் செயலாளராகவும், அதே துறையில் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.கடந்த ஆகஸ்ட் மாதம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.New Education Secretary amidst CJP protests! Who is Naresh Pal Gangwar?போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை! மாணவர்களுக்கு ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை!