இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மாணவர்களுக்கு ஆதரவு அளித்து தனது இன்ஸ்டா பக்கத்தில், “அமைதியாக தங்கள் கோரிக்கைகளை வைக்கும் இளைஞர்கள் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது” எனக் கூறியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) தில்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.காவல்துறையின் தடியடி, புகைக் குண்டு வீச்சுகளுக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தார்கள். மாணவர்கள் போராட்டத்துக்கு திரைப்பிரபங்களைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களும் ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்திய அணியின் ஒருநாள், டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஓர் இளம் இந்தியனாக, நமது தலைமுறையினர் கற்கவும் கனவு காணவும் நாம் விரும்பியதை அடையவும் அனைத்து வாய்ப்புகளும் இருக்கிறதென நான் நம்புகிறேன்.அமைதியாக தங்கள் போராட்டத்தை வெளிப்படுத்தி வரும் அனைத்து இளைஞர்கள் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. நமது நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் சக்தி கல்விக்கு இருக்கிறது. நாம் இதே உணர்வுடன் முன்னேறுவோம் எனவும் இருதரப்பு மரியாதையுடன் இதயத்தில் அனைத்து மாணவர்களின் நலனையும் புரிந்துகொள்வோம் எனவும் நம்புகிறேன். இந்தியாவின் வருங்காலத்திற்காக... எனக் கூறியுள்ளார். போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை! மாணவர்களுக்கு ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை!I believe our generation deserves every opportunity Instagram story by Indian captain shubman gill