நீட் தேர்வு: வலுக்கும் எதிர்ப்பு! தமிழகத்தில் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!!

Wait 5 sec.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் ஜூன் 20 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கலந்துகொண்டு உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் மத்திய அமைச்சர்களின் பேச்சுவார்த்தையைத் தொடந்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். எனினும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என்று சிஜேபி அறிவித்துள்ளது. சிஜேபிக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னையிலும் தொடர்ந்து 3 ஆவது நாளாக மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை லயோலா கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரிகளில் மாணவர் அமைப்பின் சார்பில் மாணவர்கள் கருப்பு உடை அணிந்து நீட் தேர்வுக்கு எதிராக கோஷமிட்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இதேபோல தமிழகத்தில் திருநெல்வேலி, திருப்பூர், கும்பகோணம் என பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராடிய மாணவர்களை காவல்துறை கைது செய்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததும், மாணவர்களின் போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.Students massive protest in chennai against NEET Examஉங்களின் அசாதாரணமான தைரியத்திற்கும் தியாகத்திற்கும் நன்றி! அபிஜீத் தீப்கே