சிஜேபி ஆதரவாளர்கள் மீதான தாக்குதல், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விவாதிக்கக் கோரி மக்களவை தலைவர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்தார்.நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா (சிஜேபி) சார்பில் நாடாளுமன்றம் நோக்கி நேற்று அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.இந்த பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், தடையை மீறிச் செல்ல முயன்ற இளைஞர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டு வீசியும் தாக்கினர்.இதற்கு கண்டனம் தெரிவித்தும், இளைஞர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக விவாதிக்கக் கோரியும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களுடன் சென்று மக்களவை தலைவர் ஓம் பிர்லாவை ராகுல் காந்தி சந்தித்தார்.இதுதொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு ராகுல் காந்தி பதிவிட்டிருப்பதாவது:”இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் மக்களவை தலைவரைச் சந்தித்தேன்.எங்கள் கோரிக்கை எளிமையானது: நேற்று மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரம் குறித்தும், தேர்வு நெருக்கடிக்கு அரசு முற்றிலும் பொறுப்பேற்காமல் இருப்பது குறித்தும் நாடாளுமன்றம் விரிவாக விவாதிக்க வேண்டும்.தங்கள் எதிர்காலம் குறித்த நியாயமான கேள்விகளைக் கேட்டதற்காக மாணவர்கள் தாக்கப்பட்டனர்.இந்திய இளைஞர்களின் எதிர்காலம் குறித்து நாடாளுமன்றத்தால் விவாதிக்க முடியாவிட்டால், அது எதற்கு இருக்கிறது?இதை மூடிமறைக்க எதிர்க்கட்சி அனுமதிக்காது. மாணவர்களின் குரல் வீதிகளிலும், நாடாளுமன்றத்திலும் கேட்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.Lok Sabha Opposition Leader Rahul Gandhi meets Speaker Om Birla - Demands discussion about attack on studentsநீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!