பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிரான வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (ஜூலை 21 ) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது, குழந்தைகளின் உணர்ச்சிகளைத் தூண்டி, அவர்களது பெற்றோர் தவெகவுக்கு வாக்களிக்க முதல்வர் விஜய் கூறியதாகவும் இது தேர்தல் விதிகளை மீறிய செயல் என்றும் குற்றம்சாட்டி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதேபோல தலைநகர் தில்லியில் தெருநாய் விவகாரம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உயர்நீதிமன்றம் தாமாக விசாரணை எடுத்துக்கொண்ட தெருநாய் விவகாரம் தொடர்பான வழக்கும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. சொத்து பிரச்னை தொடர்பாக சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் சமரச தீர்வு மையத்தில் இன்று ஆஜராகிறார். what are the cases hearing in madras high court today (july 21)?இளைஞர்களிடம் குறிப்பாக பெண்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்! அபிஜீத் தீப்கே