இயக்குநர் ஹெச். வினோத் ஜன நாயகன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதல்வர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் தணிக்கைப் பிரச்னைகளிலிருந்து மீண்டு வருகிற ஜூலை 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யின் இறுதியான படமென்பதால் உலகளவில் 3000 திரைகளுக்கு மேல் வெளியாகவுள்ளது.முன்பதிவிலும் இதுவரை, 5 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதால் முதல் நாளிலேயே மிகப்பெரிய வசூலைக் குவிக்கலாம் எனத் தெரிகிறது. இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் ஹெச். வினோத்,"ஜன நாயகன் திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் பொங்கல் வெளியீட்டாக வெளியாகாது என தெரிந்தபோதும், அப்படம் முழுமையாக இணைதளங்களில் கசிந்த போதும் இரண்டு முறை அழுதேன். அப்போது, விஜய் சார் அழைத்து, ‘இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும். மனதிற்குக் கஷ்டமாக இருக்கும்போது என்னைத் தொடர்புகொள்ளுங்கள்’ என்றார். நீண்ட காலம் கழித்து நான் அழுதது ஜன நாயகன் திரைப்படத்திற்குத்தான்” எனத் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் வெல்வார் என நினைக்கவில்லை: ஹெச். வினோத்Director H. Vinoth has spoken about the film Jana Nayagan.