இன்றைய செய்திகள் ஜூலை 21 -நேரலை

Wait 5 sec.

சிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்துசிக்கிமில் சுரங்கப்பாதை கட்டுமானத்தின் போது மீத்தேன் வாயு வெடித்ததில் 9 பேர் பலியாகியுள்ளனர்.சிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம்நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம்!டெங்கு தடுப்பூசிஇந்தியாவில் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான தடுப்பூசிக்கு முதல் முறையாக மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமை இயக்குநரகம் (டிசிஜிஐ) சந்தைப்படுத்தல் அனுமதி வழங்கியுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த டகேடா (Takeda) மருந்து நிறுவனத்தின் QDENGA (TAK-003) என்ற டெங்கு தடுப்பூசிக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பது, நாட்டின் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.இந்தியாவில் டெங்கு தடுப்பூசிக்கு முதல்முறையாக அனுமதி!மன்னிப்பு கேட்கிறேன்! அபிஜீத் தீப்கேதில்லியில் நடந்த சிஜேபி கட்சிப் போராட்டத்தில் மாணவர்கள் மீது தில்லி காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு அந்த கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே மன்னிப்பு கோரியுள்ளார்.இளைஞர்களிடம் குறிப்பாக பெண்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்! அபிஜீத் தீப்கேஷம்பு எல்லை மூடல்இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தில்லியில் விவசாயிகள் இன்று(ஜூலை 21) போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில், தில்லிக்கு செல்லும் ஷம்பு எல்லைப் பகுதி, தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது.தில்லியில் விவசாயிகள் போராட்டம்! ஷம்பு எல்லை மூடல்!காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம்தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரின் பற்றாக்குறை, தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை(ஜூலை 22) புதுதில்லியில் நடைபெறுகிறது.தில்லியில் நாளை காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம்!