மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடரும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.தேசிய தோ்வு முகமை நடத்தும் நீட் தோ்வு உள்பட பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகிறது.நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி கட்சியினர் அமைதிப் பேரணி நடத்தியபோது சிஜேபி இளைஞர்களை காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தி பின்னர் இருதரப்புக்கும் மோதல் ஏற்படவே கவல்த்துறையினர் தடியடி நடத்தினர். தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை காவல்துறையினர் வீசினர். இதில் இளைஞர்கள் பலரும் காயமடைந்தனர். தொடர்ந்து இன்றும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இளைஞர்கள் பலரும் காயங்களுடன் இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். நேற்று ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் இருந்த கூடாரங்களை காவல்துறையினர் அகற்றிய நிலையிலும் இன்று அதே இடத்தில் இளைஞர்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர். இளைஞர்கள் மீது தில்லி காவல்துறை திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இளைஞர்களிடையே மன்னிப்பு கோரியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இளைஞர்களிடம் குறிப்பாக பெண்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்! அபிஜீத் தீப்கேCJP youth protest continues at Delhi Jantar Mantar